• vilasalnews@gmail.com

சோகத்தில் தூத்துக்குடி... கடலில் மூழ்கி பலியான 3 சிறுவர்கள் - நேரில் விரைந்தார் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ!

  • Share on

மாப்பிள்ளையூரணி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் ஆறுதல் கூறினார்.


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அடுத்த மாப்பிளையூரணி அருகே கீதா ஜீவன் நகர் மற்றும் ஜாஹீர் உசைன் நகரை சேர்ந்த நரேன் ஸ்ரீ கார்த்திக், திருமணி, முகேந்திரன் ஆகிய 3 சிறுவர்கள் மொட்டை கோபுரம் கடற்கரையில் கடலுக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர்களை நேரில்லசந்தித்து ஆறுதல் கூறினார்.


இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், பகுதி செயலாளர் சிவகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கம், முன்னாள் வார்டு உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • Share on

எம்.ஜி.ஆர் - ஜெ. பாணியில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் 'ரிஸ்க்'.... பரபரக்கும் தூத்துக்குடி!

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு : சவலாப்பேரியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.பேச்சு

  • Share on