• vilasalnews@gmail.com

மாதா நகர் vs புதியம்புத்தூர் : விறுவிறுப்பான இறுதிப் போட்டி - வீரர்களை உற்சாகப்படுத்திய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா!

  • Share on

கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடுவை காமராஜர் நகர் லவ்லி கிரிக்கெட் கிளப் நடத்திய 6 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியில், மாதா நகர் அணி - புதியம்புத்தூர் லவ்லி கிரிக்கெட் கிளப் அணியினருக்கு இடையேயான இறுதி போட்டியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.


தொடர்ந்து முதலிடம் பிடித்த மாதா நகர் அணியினருக்கு ரூ.30001/- பரிசுத்தொகையை ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த புதியமுத்தூர் லவ்லி கிளப் அணியினருக்கு பரிசு கோப்பைகளையும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய துணைச் செயலாளர் சிவன் மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர், பொன்பாண்டி ரவி, வர்த்தக அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, இளைஞர் அணி தங்கதுரை, நெசவாளர் அணி செல்வம், ஈசன் சுரேஷ், தொழிலாளர் அணி அந்தோணி தனுஷ் பாலன், கிளை செயலாளர்கள் லிங்கராஜ், சற்குணம் பாண்டியன், பூவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

கோவில்பட்டி : கும்பாபிஷேக திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு - எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு!

ஆதரவற்ற பெண் என்று நம்பி திருமணம் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

  • Share on