• vilasalnews@gmail.com

கோவில்பட்டி : கும்பாபிஷேக திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு - எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு!

  • Share on

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலில் பெற்றோர் இன்றி தனித்து நின்ற பக்தர் ஒருவரின் குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று (25.01.2026) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் கூடுதலாக குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரின் குழந்தை தனியா நின்று கொண்டிருந்ததையடுத்து அந்த குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கியின் மூலம் தகவல் தெரிவித்து பின்னர் குழந்தையின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு பத்திரமாக ஒப்படைத்தனர்.


கூட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்  பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்... கையில் சிக்கிய இளைஞரிடம் காத்திருந்த அதிர்ச்சி!

மாதா நகர் vs புதியம்புத்தூர் : விறுவிறுப்பான இறுதிப் போட்டி - வீரர்களை உற்சாகப்படுத்திய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா!

  • Share on