• vilasalnews@gmail.com

சூரங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

  • Share on

விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் தைப்பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் சூரங்குடியில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சார்பாக 50 வது ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நான்கு ( ஜன.,15,16,17,18 )  நாட்கள் நடைபெறுகின்றன.


இதில் மூன்றாம் நாளான இன்று ( ஜன.,17 ) மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த காளைகளும், சாரதிகளும் பின் சாரதிகளும்  கலந்து கொண்டன.


இதில், பூஞ்சிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை, விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவருக்கு விழா கமிட்டியினர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.


சாலைகளில் சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்களும் பந்தய ரசிகர்களும் கண்டுகளித்தனர். முடிவில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  • Share on

சீனா வழி​யாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்​துக்​குடி இளைஞர்!

எட்டையபுரத்தில் எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

  • Share on