• vilasalnews@gmail.com

ஆணையர் ப்ரியங்கா தலைமையில் பெண்கள் அணியா? மேயர் ஜெகன் தலைமையில் ஆண்கள் அணியா? களை கட்டிய தூத்துக்குடி மாநகராட்சி வளாகம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. 


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் ப்ரியங்கா தலைமையில் மாநகராட்சி பெண் ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆண் ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாகவும் இருந்து நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் நடந்தது. மேலும், கோலப்போட்டி,  பானை உடைத்தல், முறுக்கு கடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  • Share on

மார்கண்டேயன் எம்எல்ஏவால் தலைகீழாக மாறிய விளாத்திகுளம் தொகுதி!

சீனா வழி​யாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்​துக்​குடி இளைஞர்!

  • Share on