தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 301 மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை முதல் மக்களைத் தேடி மருத்துவம் வரை லிஸ்ட் பெரிதாக காணப்படுகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய சில திட்டங்கள் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று.
இந்நிலையில் தங்கள் ஆட்சி முடிவடையும் நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கும் வேளையில் இலவச லேப்டாப் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் ஊட்டியுள்ளார். இதற்கு ”உலகம் உங்கள் கையில்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் உலகில் தேவையான விஷயங்களை தேடி பெற்று பயன்பெறும் வகையில் லேப்டாப்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 301 மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



