தூத்துக்குடி மாநகராட்சி 41 வது வார்டுக்கு உட்பட்ட SPG கோவில் தெரு நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, மொத்தம் 957 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கத் தொகை ரூ. 3,000 என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி 41 வது வார்டுக்கு உட்பட்ட SPG கோவில் தெரு நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின், திமுக வட்டச் செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



