• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் குண்டும் குழியுமான சாலை... சீரமைக்க அதிமுக மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி  புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணிச் செயலாளரும், கருங்குளம் யூனியன் முன்னாள் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ கோசல்ராம் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரகிரி ஊராட்சியில் உள்ள புதுக்கோட்டை ஊரானது வளர்ந்து வரும் பகுதியாகும். இந்த புதுக்கோட்டை ஊரானது தூத்துக்குடி-  திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.


தற்போது புதுக்கோட்டையில் புதிய மேம்பாலம்  கட்டப்பட்டு திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையானது குண்டும் குழியுமாக கிடைக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி சர்வீஸ் சாலையில் உள்ள குண்டும் குழியுமான சாலையை உடனடியா சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • Share on

இதுவே முதல் முறை... தங்கப்பதக்கம் வென்று சாதித்த தூத்துக்குடி பள்ளி!

கிறிஸ்துமஸ்; புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

  • Share on