• vilasalnews@gmail.com

இதுவே முதல் முறை... தங்கப்பதக்கம் வென்று சாதித்த தூத்துக்குடி பள்ளி!

  • Share on

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் கூடைப்பந்து பிரிவு போட்டியில் தூத்துக்குடி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் திருச்சி தொட்டியம் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளியும் தேனி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும் பங்கு பெற்றன.


இதில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிரசண்ட் பள்ளி பின்பு நடைபெற்ற இறுதிப் போட்டியில் விருதுநகர் மாவட்ட அணியை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி 65 க்கு 45 என்ற புள்ளி கணக்கில் விருதுநகர் மாவட்ட அணியை தோற்கடித்து  மாநில அளவிலான குடியரசு தின  போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது. 


மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் 17 வயது குட்பட்ட மாணவர் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அந்த சிறப்பு  தூத்துக்குடி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளிக்கு கிடைத்துள்ளது.


போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கிரசண்ட் மேல்நிலைப் பள்ளியின் கூடைப்பந்து பயிற்சியாளர்  பிரதீப், கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மும்தாஜ் பேகம், தூத்துக்குடி மாவட்ட கூடை பந்து கழக தலைவர் விவிடி பிரம்மானந்தம், தூத்துக்குடி மாவட்ட கூடை பந்து கழக செயலாளர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் ஆனந்த். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தினராஜ் ஆகியோர்  பாராட்டினார்கள்.

  • Share on

தூத்துக்குடி அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு!

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் குண்டும் குழியுமான சாலை... சீரமைக்க அதிமுக மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் கோரிக்கை!

  • Share on