• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு!

  • Share on

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஊர்த்தி ஓட்டுநர் சங்க அலுவலகத்தில் வைத்து இன்று ( 7.12.25 )  நடைபெற்றது.


இக்கூட்டத்தில், மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் முன்னிலையில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 


புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு:- 


மாவட்ட தலைவராக விளதை செல்வராஜ் (ஊரக வளர்ச்சி துறை ), மாவட்ட செயலாளராக ராஜ்குமார் ( மீன்வளத்துறை ), மாவட்ட பொருளாளராக ஜெயசீலன் ராஜ்குமார்  ( ஊரகவளர்ச்சி துறை )


மாவட்ட துணைத் தலைவராக நகர்புறம் குணசிங்மைக்கிள்ராஜ் ( ஊரக வளர்ச்சித் துறை ), மாவட்ட துணைத் தலைவராக புறநகர் லெட்சுமனண் ( மருத்துவ துறை ), மாவட்ட துணைச் செயலாளராக முருகன் ( நெடுஞ்சாலைதுறை )  



மாநில செயற்குழுஉறுப்பினராக வேல்முருகன் ( மருத்துவதுறை ), மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக லிங்கம்பிரபாகரன் ( ஊரக வளர்ச்சித்துறை ), மாவட்டதனிக்கையாளராக லட்சுமிசிபிகாந்தன் ( வருவாய்த்துறை ), மாவட்ட அமைப்புசெயளாளராக ஜோதிமுத்து ( மருத்துவதுறை )  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


  • Share on

கஞ்சா, கத்தியுடன் தப்பியோட்டம்... துரத்தி பிடித்த தூத்துக்குடி போலீஸ் - எஸ்பி பாராட்டு!

இதுவே முதல் முறை... தங்கப்பதக்கம் வென்று சாதித்த தூத்துக்குடி பள்ளி!

  • Share on