• vilasalnews@gmail.com

கஞ்சா, கத்தியுடன் தப்பியோட்டம்... துரத்தி பிடித்த தூத்துக்குடி போலீஸ் - எஸ்பி பாராட்டு!

  • Share on

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையின் போது கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த தப்பியோட முயன்றவரை துரத்தி பிடித்து கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் நேற்று (04.12.2025) காலை தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் யாக்கோபு, சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் ரூபா ரோஸ்லின், ஆயுதப்படை காவலர்கள் ஜெயமுருகன், ஜெயந்தி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்  தாமரைக்கனி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது தப்பியோட முயன்றவரை மேற்படி போலீசார் துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி பூபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கேசவன் (22) என்பதும் அவர் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவனை கைது செய்து கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


மேற்படி வாகனத்தணிக்கையின் போது துரிதமாக செயல்பட்டு கேசவனை துரத்திப் பிடித்து கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து சிறப்பாக பணிபுரிந்த மேற்படி காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (05.12.2025) நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி போட்டோகிராபர் பரிதாபமாக உயிரிழப்பு!

தூத்துக்குடி அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு!

  • Share on