தூத்துக்குடியில் சாலையின் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த போது, அரசு பேருந்து மோதிய விபத்தில் போட்டோகிராபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முள்ளக்காடு பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெக வீரபாண்டியன் மகன் ராம்குமார், போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று ( 5.12.25 ) மாலை 4 மணியளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார்.
அப்போது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.



