• vilasalnews@gmail.com

சண்முகையா எம்எல்ஏ விற்கு புகழாரம் சூட்டும் மகளிர் சுய உதவிக்குழுவினர்!

  • Share on

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த சண்முகையா எம்எல்ஏ விற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு, அய்யனடைப்பு ஊராட்சி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர்.


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனடைப்பு ஊராட்சியில் 50 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. இந்த மகளிர் குழுக்கள் கூட்டம் நடத்துவதற்கு கட்டிடம் இல்லாமல் இருந்து வந்த சூழ்நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எங்கள் பகுதி மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வந்தபோது நாங்கள் அய்யனடைப்பு ஊராட்சியில் 50 க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் உள்ளன. ஆனால், கூட்டம் நடத்துவதற்கோ, சுயதொழில் பயிற்சி பெறுவதற்கோ கட்டிட வசதி இல்லாமல் உள்ளது. ஆகவே, எங்களுக்கு மகளிர் குழு கட்டிடம் வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைத்தோம்.


எங்களது கோரிக்கை ஏற்று உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடம் கட்டித் தருவேன் என்று எம்எல்ஏ அன்று உறுதி அளித்துச் சென்றார்.


ஏதோ மக்கள் கேட்டார்கள். நாமும் செய்வோம் என்று வாக்குறுதி கொடுப்போம் என பெயரளவிற்கான செயல்பாடாக அல்லாமல், சொன்னதை செய்வேன் என்ற சொல்லிற்கிணங்க, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு அந்த கட்டிடத்தையும் கடந்த மாதம் திறந்து வைத்தார்கள்.


தற்போது சண்முகையா எம்எல்ஏ மூலம் கிடைக்கப் பெற்ற கட்டிடத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆரி ஒர்க் பயிற்சி பெற்று வருகின்றனர். மகளிரின் வாழ்வாதார உயர்வுக்கு உற்ற துணையாக இருந்து மகளிர் குழு கட்டிடம் அமைத்து தந்த சண்முகையா எம்எல்ஏ விற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு, அய்யனடைப்பு ஊராட்சி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் பெண்களின் தங்க தாலி செயினுக்கு குறிவைத்த 2 பேரை தட்டி தூக்கியது போலீஸ்!

பாஞ்சாலங்குறிச்சியில் களை கட்டிய பௌர்ணமி பூஜை விழா... பக்தர்கள் பெரும் திரளானோர் பங்கேற்பு!

  • Share on