பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீற்றிருக்கும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் இந்திய விடுதலைப்போராட்ட முதல் வீரர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான அருள்மிகு வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜை விழா மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் வீரசக்கதேவிக்கு சிறப்பு அலங்கார பூஜை, பெண்களின் விளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வீரசக்கதேவியை தரிசித்து செல்வார்கள்.

இந்த நிலையில், கார்த்திகை மாதத்திற்கான பௌர்ணமி பூஜை விழா பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீற்றிருக்கும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தில் இன்று ( 4.12.25 ) நடைபெற்றது. கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை விழாவின் சிறப்பாக பெண்களின் அகல்விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த அகல்விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை விழாவிற்கான உபயதாரர்கள், தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் எம்.எஸ்.குமார், விக்னேஷ் குமார், பாஞ்சாலங்குறிச்சி ஜோதிபாசு, ஜெயந்தி , விவேகா, பாலமுருகன், அ.குமரெட்டியாபுரம் மொட்டையசாமி, ஓம் சரவணபுரம் பொம்மு சாமி நாயக்கர், கிருஷ்ணம்மாள், கீழ பூவானி ராஜா பொம்முதுரை, மஞ்சு, தெற்கு சிலுக்கன்பட்டி பாலசுப்பிரமணியன், சுமதி, அருள்செல்வி, அய்யாச்சாமி, மகேந்திரக்குமார் மற்றும் ஆயிரகணக்கான பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப்பெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.





