ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரித படுத்தவும், மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள பதிவுகளில் இருந்து விரைவாக மழை நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சண்முகையா எம்எல்ஏ வலியுறுத்தினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிளையூரணி ஊராட்சியில் கேவிகே சாமி நகர், ஓம் சாந்தி நகர், அ.சண்முகபுரம், மாதா நகர், வடக்கு சோட்டையன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரித படுத்தவும், மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள பதிவுகளில் இருந்து விரைவாக மழை நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். மேலும், பள்ளமாக உள்ள சாலைகளில் சரள் அடித்து மேம்பாடு செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, உதவி பொறியாளர் ரவி, திமுக மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஆர்.கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், கிளை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




