• vilasalnews@gmail.com

இதற்கு மேலும் பொறுமையா... ஓட்டப்பிடாரம் தொகுதியில் சாலையை மறித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மோகன்!

  • Share on

புதியம்புத்தூர் - தூத்துக்குடி இடையே பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரி, ஓட்டப்பிடாரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமையில் அதிமுக, பாஜகவினர் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டதிலும் ஈடுபட்டனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில், புதியம்புத்தூர் - தூத்துக்குடி இடையே படுமோசமாக சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், சாலையை உடனடியாக சீரமைக்க கோரியும், இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறையை  கண்டித்தும், ஓட்டப்பிடாரம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன் தலைமையில், அதிமுக, பாஜகவினர் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் சாலை மறியலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் போது, சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலை துறை மற்றும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


இந்த போராட்டத்தில் அதிமுக நகர செயலாளர் ஆறுமுகசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன்மோசஸ், பொதுக்குழு உறுப்பினர் புதியம்புத்தூர் ரவி மாகாலட்சுமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்துசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் அய்யப்பன்,


ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தினேஷ்குமார், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், பாஜக ஒன்றி செயலாளர் பட்டுராஜ், பாஜக வர்த்தகப்பிரிவு மாவட்டதலைவர் முத்தமிழ்செல்வன், பாஜக ஒன்றிய துணைத்தலைவர் வேல்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் நடுவைக்குறிச்சி முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதி புதுப்பச்சேரி முனிஷ்வரி, புதியம்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் செந்தூரான், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் ஆல்வின் 


அதிமுக கிளை செயலாளர்கள் முருகேசன்,பொன்னுதுரை, சுப்பிரமணியன், தங்கமாரியப்பன் ஆனந்தகுமார் உட்பட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கவந்து கொண்டனர்.

  • Share on

மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்திய சண்முகையா எம்எல்ஏ!

தூத்துக்குடியில் சொத்து பிரச்சனையில் தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை!

  • Share on