• vilasalnews@gmail.com

தூத்துக்குடியை மிரட்டும் மழை... என்ன செய்கிறார் மேயர் ஜெகன் பெரியசாமி?

  • Share on

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது.


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முழுக்க முழுக்க கனமழை கொட்டி தீர்த்தது. காலையில் ஆரம்பித்த மழை இரவு வரை தொடர்ந்தது.


இதனால் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் இன்றும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. 


மேலும், குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனிடையே, தூத்துக்குடி மாநகரில் காலை முதலே கரு மேகங்கள் சூழ்ந்து கனமழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வந்த நிலையில், மாலை முதல் மழை வெளுத்து வாங்க தொடங்கியது.


இதனால் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல கரை புரண்டு ஓடியது. இத்தகைய சூழலுக்கு நடுவே தூத்துக்குடி மக்களை பாதுகாக்கும் பொருட்டும், தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து  பொதுமக்கள் மழையால் பாதிப்படையாத வகையிலும், புறநகர் பகுதியில் இருந்து மாநகருக்குள் வரும் மழைநீரின் சூழலை கண்காணித்து அதனை சரியான விதத்தில் கையாண்டு மாநகருக்குள் மழைநீர் புகாத வகையில் போர்கால நடவடிக்களை மேற்கொண்டு, கொட்டும் மழைக்கு நடுவே களத்தில் நின்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் மேயர் ஜெகன் பெரியசாமி.


இந்த ஆய்வினைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்:-


தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது ஓடையிலும் வடிகால்களிலும் முழு அளவில் மழை நீர் சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகரப் பொறுத்தவரை புறநகர் பகுதியில் இருந்து தற்போது வரை எந்த மழை நீரும் மாநகரம் பகுதிக்குள் வரவில்லை. மேலும் மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரானது மழையின் அளவு குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், தூத்துக்குடி மாநகர மக்கள் கட்டணமில்லா 18002030401 என்ற இந்த எண்ணில் மழை தொடர்பான புகார்களுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்பதையும் கூறிக் கொள்கிறேன் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாநகரில் மழை வெளுத்து வாங்கி, பொதுமக்களை அச்சம் அடைய வைக்கக்கூடிய நிலையில், இந்நேரத்தில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி என்ன செய்கிறார் என்ற கேள்விகளுக்கு இடமளிக்காத வகையில், மழைநீர் வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக, மாநகருக்குள் வரும் மழைநீர் அளவும் வருகையும், மாநகரில் பதிவாகும் மழை அளவு, கட்டுப்பாட்டு அறை செயல்பாடு என மழை பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடும் அவரின் இந்நேர களப்பணி பல்வேறு தரப்பினரிடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.  


  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி மக்களே.. தேங்கி நிற்கும் மழைநீரில் கவனம் தேவை : பரிதாபமாக போனது உயிர்!

  • Share on