• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அசால்டாக செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள்... அச்சத்தில் பொதுமக்கள்!

  • Share on

தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே தனியாக நிற்கும் பெண்கள், தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை என குறிவைத்து செயின்களை பறித்துவிட்டு அசுர வேகத்தில் பைக்கில் தப்பிச் செல்லும் மர்ம நபர்களின் திருட்டு செயல்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


தூத்துக்குடி மாநகர் அண்ணாநகரில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடமும்,  கட்டபொம்மன் நகரில் வீட்டின் முன்பு நின்று குழந்தைக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடமும் நேற்று ( 19.11.25 ) இரவு ஹெல்மெட் அணிந்த படி பைக்கில் வந்த மர்ம நபர் செயினை பறிக்க முயற்றுள்ளனர். இவை அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.


ஆட்கள் நடமாடக்கூடிய, தெருக்களில் சர்வ சாதாரணமாக செயினை பறிக்க முயலும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றால் இவ்வளவு துணிகரம் திருடர்களுக்கு எப்படி வருகிறது? தூத்துக்குடியில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


போலீசாரின் முழு இரவு நேர ரோந்து பணி, குறிப்பிட பகுதியில் மட்டும் என்றில்லாமல் தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தினால் மட்டுமே பொதுமக்களுக்கான பாதுகாப்பு சூழல் ஏற்படும். பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share on

சுழலும் பாசறை செயலாளர்... உற்சாகத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுகவினர்!

திருச்செந்தூரில் இனி ரீல்ஸ் எடுத்தால்.. ரீல்ஸ் வெறியர்களுக்கு ஆப்பு!

  • Share on