தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வழியாக மாவட்ட விளையாட்டு மைதானம், மாதாகோவில், மீன்பிடி துறைமுகம் செல்லக்கூடிய, பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாக ஜார்ஜ் ரோடு இருந்து வருகிறது. இந்த சாலைகளின் இடைபட்ட ஒரு பகுதி சாலையானது சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆகவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும். அதே போல, மாநகரில் மழையால் ஆங்காங்கே சாலைகள் சில சேதமடைந்துள்ளது. அதனையும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கண்டறிந்து அவைகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



