• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கார் விபத்து... மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!

  • Share on

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.


தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த மருத்துவ மாணவர்களான சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.


மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Share on

கொலை வழக்கு... 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடியில் மோசமான சாலை... உடனே சரி செய்ய கோரிக்கை!

  • Share on