தூத்துக்குடியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவரணி சார்பில் மாபெரும் படகு போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற இப்போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தமிழ்நாடு மீனவர் நலவாரிய அமைப்பாளரும், வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளருமான அந்தோணி ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முதல் இடத்தை ராஜ் என்பவரும், இரண்டாவது இடத்தை விஜயன் என்பவரும், மூன்றாவது இடத்தை ராஜேஷ் என்பவரும் வெற்றி பெற்றார்கள்.




