நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) சங்கீதா சின்னராணி முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் 11 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போல் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) சங்கீதா சின்னராணி முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, ஏற்கனவே காலியாக இருந்த தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.




