திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சந்தீப் மிட்டல் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வு நாளை (27.10.2025) மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறுவதை முன்னிட்டு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சந்தீப் மிட்டல் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (26.10.2025) திருச்செந்தூர் சரவணபவன் ஹோட்டலில் வைத்து கந்தசஷ்டி திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி நகரம் ஆகிய மாவட்டம்/நகரங்களைச் சேர்ந்த 5 காவல் கண்காணிப்பாளர்கள், 16 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 50 காவல் உதவி கண்காணிப்பாளர்/காவல் துணை கண்காணிப்பாளர்கள், 143 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 16 மாவட்டங்களைச் மேற்பட்ட சுமார் 4300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும். மேலும் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு குற்ற புலனாய்வு காவல்துறையினரும், காவல்துறையினரின் 2 ட்ரோன் கண்காணிப்பு குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் உதவி/ காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




