• vilasalnews@gmail.com

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  • Share on

ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்தசஷ்டி திருவிழா 2025, கடந்த 22ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 


விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை அக்டோபர் 27ஆம் தேதியும், மறுநாள் திருக்கல்யாண வைபவம் அக்டோபர் 28ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நாளை அக்டோபர் 27ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.


இந்த விடுமுறை, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பொருந்தாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் நவம்பர் 8ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது எதனால்? வெளியானது புது தகவல்!

தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரிகளுடன் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஆலோசனை!

  • Share on