• vilasalnews@gmail.com

சட்டசபையில் சண்முகையா எம்எல்ஏ வைத்த கோரிக்கை... ஓட்டப்பிடாரம் தொகுதியே மாறப்போகுது!

  • Share on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வெள்ள உபரிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக வைத்த கோரிக்கை தொகுதி விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் உபரி வெள்ள நீரை, கோடைமேல் அழகியான் அணை கட்டில் இருந்து கடனாநதி, சிற்றாறு, உப்பாறு, கல்லாறு மற்றும் வைப்பாறு வெள்ள உபரி நீர் ஆகியவற்றை புவிஈர்ப்பு மூலம் இணைத்து கால்வாய் அமைத்து அதன் மூலம் விவசாயத்திற்கு அந்த நீரைப் பயன்படுத்தவும், இதற்காக 181 கி.மீ தூரம் வழிதடம் அளையாளம் காணப்பட்டு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பயனளிக்கும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசினார்.


இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்


வெள்ள உபரி நீர் புவிஈர்ப்பு கால்வாய் இணைப்பு திட்டம் என்பது ஆறுகளில் இருந்து மழைக்காலத்தில் வெளியேறும் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் ஒரு திட்டம் ஆகும். 


திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளை வளப்படுத்துவதற்காக, தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரியாக வெளியேறும் வெள்ள நீரை கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு விவசாயத்தை பயன்படுத்தப்படும்.


நீர் பாசனம் இன்றி தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுக்கும் மிகப்பெரிய திட்டமாகும்.


181 கி.மீ தூரம் வழிதடத்தில் வெள்ள உபரி நீர் புவிஈர்ப்பு கால்வாய் இணைப்பு திட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நிறைவேறும் பட்சத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பயனளித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். தொகுதியே செழிப்படையும். 


ஆகவே, இத்தகைய மகத்தான திட்டம் தொடர்பான கோரிக்கையை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வைத்திருப்பது விவசாய பெருங்குடி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தந்துள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் ஈடுபட்டோர் கைது... போர்க்களமான தூத்துக்குடி!

  • Share on