• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


கிராம ஊராட்சிகளில், மத்திய, மாநில அரசு திட்டங்களை சரியாக செயல்படுத்துதல், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வது. சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிடுவது. வரி வசூல் செய்வது என அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பு மிக்கவராக அரசுப் பணியாளராக ஊராட்சி செயலாளர்கள் செயல்படுகின்றனர்.


இந்தநிலையில், தற்போது தமிழக முழுவதும் காலியாக உள்ள 1300-க்கும் அதிகமான ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதளம் முகவரியில் இணையதளம் வழியாக 10.10.2025 முதல் விண்ணப்பிக்கலாம். ( இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் ) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9.11.2025 ஆகும்

  • Share on

தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மேம்பாலம் அருகே இருந்ததை எடுத்தீங்களே... மீண்டும் போடலாமே சார்!

  • Share on