• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் எஸ்.பிரியங்கா!

  • Share on



தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் 15 வது புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா இன்று ( 1.9.25 ) பதவி ஏற்று கொண்டார்


யார் இந்த எஸ்.பிரியங்கா?


ஏப்ரல் 25 ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு பிறந்த கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தைச் சேர்ந்த பி.இ பயோமெடிக்கல் படித்த எஸ்.பிரியங்கா, தன்னுடைய அப்பா, அம்மா இருவரும் மக்களுக்கான சேவை மனப்பான்மையுடன் அரசு பணியாளராக இருந்து வந்ததால், தானும் அது போலவே அரசு பணி பெற்று மக்களுக்கான சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார்.


தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தன்னுடைய முன்னுதாரணமாக தனது அம்மாவையே பின்பற்றியுள்ளார். தனக்கான மிகப்பெரிய உந்துதல் சக்தியாக  தனது அம்மா எப்போதும் இருப்பார் என தெரிவிக்கும் எஸ்.பிரியங்கா, 


தன்னுடைய கடலூர் மாவட்டம் அடிக்கடி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும். அந்த சமயத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் பணி அதற்கு எவ்வளவு தேவை படுகிறது. உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து, மாவட்ட ஆட்சியர் பதவியை விரும்பியதாகவும், தனது கல்லூரி காலங்களிலேயே குடிமைப்பணி குறித்து தெரிந்து கொண்டு, அதன் பின்பு தான் அத்தேர்விற்கு தயாரானதாகவும் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குடிமைப்பணி தேர்வுக்காக தன்னை தயார் படுத்தி முதல் முறையாக நேர்முகத் தேர்வு வரை சென்று,  குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


வெற்றி என்பது தோல்வியில் இருந்து தான் பெற முடியும். அதே வேளையில் தொடந்து விடா முயற்சியுடன் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற உறுதியை தனது மனதில் நிலை நிறுத்திக் கொண்டு, இரண்டாவது முறையாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 68 வது இடமும், தமிழக அளவில் 3 வது இடமும் பெற்றார்.


2020 ஆண்டு பிரிவு இந்திய ஆட்சி பணி அலுவலரான எஸ்.பிரியங்கா, திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் ( பயிற்சி ), திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ), பொள்ளாச்சி சப் கலெக்டர் உள்ளிட்ட பணிகளை ஆற்றி, தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இன்று ( 1.9.25 ) பொறுப்பேற்றுள்ளார்.


தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி அழகுபடுத்தப்படும். மாநகராட்சிக்கு என்ன தேவையோ, மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து நிறைவேற்றுவேன் என்றார். 

  • Share on

ஊராட்சி செயலர் பணியிட மாற்றம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு!

காவல் நிலையங்களில் திருப்தி இல்லையா? தூத்துக்குடி எஸ்பியை நேராக சந்தித்து முறையிடலாம்!

  • Share on