• vilasalnews@gmail.com

காவல் நிலையங்களில் திருப்தி இல்லையா? தூத்துக்குடி எஸ்பியை நேராக சந்தித்து முறையிடலாம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை (செப்.3) புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெறுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (செப்.3) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் எஸ்.பிரியங்கா!

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதல்!

  • Share on