• vilasalnews@gmail.com

பேருந்து பயணத்தில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா!

  • Share on

பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து மாலை நேரமும் வந்து செல்லக்கூடிய வகையில் வழிதடப் பேருந்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார். 


ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவில்லிகோட்டை, ஓணமாக்குளம், மலைபட்டி, இளவேலங்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், மாலை நேரங்களில் தங்கள் கிராமத்திலிருந்து கடம்பூர் மற்றும் கோவில்பட்டி செல்வதற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.


அதனைத்தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 86C கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் ஓணமாக்குளம் வழியாக கல்லத்திக்கிணறு, மலைபட்டி  வரை காலை மட்டும் வந்து செல்லும் பேருந்து தினசரி மாலை வேலையும் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 


இதனையடுத்து, இன்றைய தினம் மலைப்பட்டி மற்றும் கல்லத்திக்கிணறு கிராமத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மாலை நேர பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார். இந்த மாலை நேர பேருந்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இந்த மாலை நேர பேருந்து தொடக்க விழாவில், மண்டல மேலாளர் ரமேசன், கிளை மேலாளர் ஜெகநாதன், தொமுச செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ராஜ்மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நடந்த நாங்களும் உங்களோடு தான் நிகழ்வு!

தூத்துக்குடியில் நாளை குடிநீர் கட்!

  • Share on