தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை 21ம் தேதி (வியாழக்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 21.8.2025 (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.



