உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்த மூதாட்டிக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சி, சிறுப்பாடு பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று ( ஆக.,19 ) நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், மனு அளிக்க வந்த பொதுமக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது, சிறுப்பாடு கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி குடும்ப அட்டை முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்க வந்தார். அவரிடம் அவரது கோரிக்கை குறித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கேட்டறிந்தார். அப்போது, " உங்களுடைய தொகுதியில் எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுகிறது. எங்கள் நம்பிக்கையே நீங்கள் தான் என வள்ளியம்மாள் என்கிற அந்த மூதாட்டி சண்முகையா எம்எல்ஏ கரங்களை பற்றிக்கொண்டு நெகிழ்ந்தார்".

தொடர்ந்து, மூதாட்டியின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், முகாமிலே மூதாட்டி வள்ளியம்மாள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வின் அக்கறை மிகுந்த மக்கள் பணியை கண்ட அங்குள்ள பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.



