• vilasalnews@gmail.com

இது 5 வது ஆண்டு... வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய எஸ்பி ஆல்பர்ட் ஜான்!

  • Share on

ஆழ்வார்திருநகரி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த காவலரின் படத்திற்கு எஸ்பி அஞ்சலி செலுத்தினார்.


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சுப்பிரமணியன் கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்தார். அவரது 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று ( ஆக.,18 )  பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் உட்பட காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.

  • Share on

திடீரென வீசிய பலத்த சூறைகாற்றால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம்... சற்றும் தாமதிக்காத சண்முகையா எம்எல்ஏ!

எம்எல்ஏவின் கரங்களை இறுகப்பற்றிய மூதாட்டி... உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

  • Share on