தூத்துக்குடியில் யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவையும், தூத்துக்குடி மாவட்ட யோகீஸ்வரர் சமுதாயப் பேரையும் இணைந்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவையும் தூத்துக்குடி மாவட்ட யோகீஸ்வரர் சமுதாயப் பேரையும் இணைந்து, 2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு விழாவானது தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, யோகீஸ்வரர் மாநில சமுதாயப்பேரவை தலைவர் ராஜகோபால் யோகீஸ்வரர் தலைமை வகித்தார். செயல் தலைவர் ராஜமுருகன் யோகீஸ்வரர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து என்ற கண்ணன் யோகீஸ்வரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் செல்வ கேசவன் யோகீஸ்வரர், நிர்வாக செயலாளர் சுப்பிரமணியன் யோகீஸ்வரர், பொருளாளர் சுரேஷ் யோகீஸ்வரர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். மாநில சட்ட ஆலோசகர் பிச்சாண்டி யோகீஸ்வரர் வாழ்த்துரை வழங்கினார். இதில் டாக்டர் ஜெயபாஸ்கர் யோகீஸ்வரர், டாக்டர் உமா ஜெயபாஸ்கர் யோகீஸ்வரர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சண்முகையா யோகீஸ்வரர், நடராஜன் யோகீஸ்வரர், கோபிநாதன், அஜித்குமார், சோம சேகரன் உள்ளிட்டர் வாழ்த்துரை வழங்கினர். விழா முடிவில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் என்ற ரவி யோகீஸ்வரர் நன்றி உரையாற்றினார். இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.



