• vilasalnews@gmail.com

தூத்துக்குடியின் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் காலமானார்!

  • Share on

சமூக செயல்பாட்டாளர், மனித உரிமை பாதுகாப்பாளர், மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நிறுவன தலைவர் என பன்முகத்தன்மையுடன் விளங்கி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் நேற்று ( ஆக.,8 ) காலமானார்.


பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்ததோடு, பொது நல வழக்குகள் மூலம் சட்ட போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையும், உரிமையையும் பெற்று வருவது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விதவை பெண்ணான பாப்பா (47), என்பவருக்கு கடந்த 2.11.2007 அன்று காவல்நிலையத்தில் காவலர்களால் ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடி 15 ஆண்டுகளுக்கு பின் காவலர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்து நீதியை நிலை நாட்டியது. பொதுமக்களுக்கான பிரச்சனைகளில் களத்தில் முன் நின்று போராடுவது. கருத்துரிமையாளர்களுக்கு ஆதராவாக நிற்பது என தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்க்கைகாக வாழ்ந்த, 


சமூக செயல்பாட்டாளர், மனித உரிமை பாதுகாப்பாளர், மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நிறுவன தலைவர் என பன்முகத்தன்மையுடன் விளங்கி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் நேற்று ( ஆக.,8 ) உடல் நலக்குறைவால் காலமானார்.


அவரது நல்லடக்கம் இன்று ( 9.8.25 ) சனிக்கிழமை தூத்துக்குடி கோரம்பள்ளம் A.சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

  • Share on

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவை விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு!

  • Share on