• vilasalnews@gmail.com

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!

  • Share on

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை ) காலை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.


இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டின் (2025) ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை ( 09.08.2025, இரண்டாவது சனிக்கிழமை ) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.


இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.


மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், இந்த முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

  • Share on

8 காவல் நிலையங்கள் சபாஷ்... தூத்துக்குடி எஸ்பி பாராட்டு!

தூத்துக்குடியின் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் காலமானார்!

  • Share on