தூத்துக்குடியில் தனியார் ஐஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறியதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிக்கு குரூஸ் புரத்தைச் சேர்ந்த ஒயிட் என்பவருக்கு சொந்தமான ஐஸ் பிளாண்ட், ஜான் சேவியர் நகர் மீனவர் காலனி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஐஸ் பிளாண்டில் முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் அடிக்கடி அம்மோனியா வாயு வெளியேறி அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தனியார் ஐஎஸ் பிளாண்ட்டில் இருந்து அமோனியா வாயு வெளியேறியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து அம்மோனியா கேஸ் மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் இது போன்ற ஆலைகள் அமைக்க தடைசெய்வதோடு உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.




