• vilasalnews@gmail.com

தெய்வசெயல்புரத்தில் அடிக்கடி விபத்து... ஆட்சியரிடம் அதிமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல் ராம் ராஜா புகார்!

  • Share on

தெய்வசெயல்புரத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல் ராம் ராஜா புகார் மனு அளித்துள்ளார்.


நெல்லை - தூத்துக்குடி சாலையில் தெய்வசெயல்புரத்தில் வடக்கு காரசேரி ரோடு இணையும் இடத்தில் பேரிக்காடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் திரும்பும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரிகார்டு சரியாக அமையவில்லை. ரோடு கடப்போர் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் இந்த பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் போல கம்பிகள் இல்லாமல் தகரம் வைத்து அடைத்தது போல் உள்ளது. எனவே பார்வை மறைக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.


கடந்த மாதம் சுமார் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சுமார் 6.15 மணியளவில் அருகில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர் ரோட்டை கடக்க முயலும் போது, எதிரே வரும் வாகனம் தெரியாமல் போனதால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.


இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கோசல் ராம் ராஜா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

  • Share on

விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிசாமி!

விளாத்திகுளத்தில் திமுகவை சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

  • Share on