• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ : கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தகவல்

  • Share on

அதிமுக பொதுச்செயலாளரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 1 ஆம் தேதி கோவில்பட்டில் ‘ரோடு ஷோ’ மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக, கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேசுகையில், 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் அவர் வருகிற 31 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். அன்று, இரவு விளாத்திகுளத்தில் அவர் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறா். 


மறுநாள் (ஆக., 1 ஆம் தேதி) காலையில் கோவில்பட்டிக்கு வருகை தரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படும். கோவில்பட்டி தொகுதியில் கடலைமிட்டாய், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.


பின்னா் மாலை 4 மணிக்கு தீயணைப்பு நிலையம் முன்பிருந்து பயணிகள் விடுதி வரை அவர் ‘ரோடு ஷோ’ நடத்தி, பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் ஓட்டப்பிடாரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அவரது பிரசார பயணத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.  அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளது தான். 2026-ல் அதிமுக தான் ஆட்சி வரும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர், என்றார்.


இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா்  கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர். கூட்டத்தில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாநில இணைசெயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயலாளர் சங்கர் கணேஷ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், பொது குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

அனுமதியின்றி ஜெப கூடங்கள்; மத பிரச்சாரம்... விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியார் பெயர் : இந்து முன்னணி தீர்மானம்!

காதலில் உணர்ச்சித் தீவிரம்... தூத்துக்குடியில் பரிமாறப்பட்ட சங்க இலக்கிய காதல்!

  • Share on