• vilasalnews@gmail.com

அங்கன்வாடியில் குழந்தைக்கு கெட்டுப் போன முட்டை... ஆமா கவா்மெண்ட் அப்படிதான் தருது; அங்கன்வாடி ஊழியா் அளித்த அதிர்ச்சி பதில்!

  • Share on

அங்கன்வாடியில் குழந்தைக்கு கெட்டுப் போன முட்டை கொடுக்கப்பட்டதாக தாய் ஒருவர் ஊழியரிடம் செல்போனில் தொடா்பு கொண்டு தொிவித்த நிலையில், அதற்கு ஊழியர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குருஸ் கோயில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் மூலம் அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் படி அதே பகுதியில் உள்ள லட்சுமி என்ற பெண்ணின் ஒன்றரை வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட மூன்று முட்டைகளை தண்ணீரில் போட்டுப் பார்த்த போது அந்த முட்டைகள் கெட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.


இதையடுத்து, லட்சுமி அங்கன்வாடி பணியாளர் ரோஸில்டாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறி, இது தொடா்பாக யாரிடம் புகார் அளிப்பது? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரோஸில்டா, “கவா்மெண்ட் கொடுக்கும் முட்டைகள் அப்படி தான் இருக்கின்றன. அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் இது குறித்து முதலமைச்சருக்கே கொண்டு புகார் கொடுங்கள்.


அங்கன்வாடிகள் மட்டுமல்ல ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பிலும் புழு இருக்க தான் செய்யும். அதையெல்லாம் பற்றி நீங்கள் புகார் தெரிவித்துள்ளீர்களா? நாங்கள் இது குறித்து அதிகாரிகளிடம் சொல்லத் தான் செய்கிறோம். ஆனால், முட்டைகள் தரமாக இருப்பதாக எங்களிடம் கையெழுத்து வாங்கி சென்று விடுகிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்?“ என பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடா்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share on

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முக்காடு அணிந்து ஒப்பாரி!

தூத்துக்குடியில் காற்றாலை, சோலார், ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக பனை மரங்கள் அழிப்பு!

  • Share on