• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முக்காடு அணிந்து ஒப்பாரி!

  • Share on

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு முக்காடு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடைபெற்றது.


கடந்த தேர்தல் வாக்குறுதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி குறைந்தபட்ச பென்சன் அகவிலைப்படி வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வைஜெயந்தி மாலா தலைமையில் கருப்பு முக்காடு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி செல்வம், நகரச் செயலாளர் வெனிற்றால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முக லட்சுமி, மாநகரச் செயலாளர் கவிஞர் சுந்தரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் ஒப்பாரி போராட்ட  உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ராமு நன்றி கூறினார்.

  • Share on

கயத்தார் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது புகாா்!

அங்கன்வாடியில் குழந்தைக்கு கெட்டுப் போன முட்டை... ஆமா கவா்மெண்ட் அப்படிதான் தருது; அங்கன்வாடி ஊழியா் அளித்த அதிர்ச்சி பதில்!

  • Share on