தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகதத்திற்கு முன்பு சிலர் திரண்டு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகதத்திற்குமுன்பு சிலர் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தொடா்ந்து, அவா்களை தடுத்து நிறுத்திய போலீசாா், ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளா்கள் தரப்பில் இருந்து முக்கிய பிரதிநிதிகள் சிலா் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகதத்திற்கு முன்பு சிலர் திரண்டு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது



