பெருந்தலைவர் காமராஜர் மற்றும் நாடார் மக்கள் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடார் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா அவதூறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், என்பவர் நாடார் இன மக்கள் குறித்து அவதூறாக பேசி காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில், சமத்துவ மக்கள் கழகம் மாலை சூடி அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் மாரியப்பன், தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார், பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர், சாஸ்தா, வீர முருகன், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், மற்றும் கார்த்திசன், காமராஜர் நற்பணி இயக்கம் கிருஷ்ணராஜபுரம் அசோக்,பாலா,பனக்காட்டு படை கட்சி ஹரிராம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினா் கலந்து கொண்டனர்.




