• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஆட்சியாிடம் ஒரே நாளில் வந்த 450 கோரிக்கை மனுக்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (21.07.2025) நடைபெற்றது.


பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 29 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகையாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 5 இலட்சம் என மொத்தம் ரூ. 15 இலட்சத்திற்கான ஆணைகளையும், வீட்டு வசதி திட்டம் (BLS) 22 பயனாளிகளுக்கு தலா ரூ.4 இலட்சம் என மொத்தம் ரூ. 88 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும், தாட்கோ சார்பாக 01 பயனாளிக்கு ரூ. 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வழங்கினார்.


மேலும், World Master Games 2025 க்கான தாய்லாந்தில் நடைபெற்ற சம்மட்டி எறிதல் (Hammer throw) போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த T.சுப்பிரமணியன் என்பவர் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் வென்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்திடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.


இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் தமிழரசி, உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அன்தோனி அதிர்ஷ்டராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அனந்த்பிரகாஷ் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


  • Share on

திடீரென திரண்ட கூட்டம்... குவிக்கப்பட்ட போலீசார் - தூத்துக்குடியில் பரபரப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

  • Share on