• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா!

  • Share on

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. 


தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் மாடசாமி  தலைமையில் தூத்துக்குடி மண்டல பொதுச் செயலாளர் நிர்மல் கிறிஸ்டோபர் முன்னிலையில் தூத்துக்குடி வ.உசி.மார்கெட் அருகிலுள்ள காமராஜரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் சாமிவேல், மாவட்ட பொருளாளர் ஜான் சாமுவேல், இளைஞரணி மாவட்ட தலைவர் செல்வின், நிர்வாகிகள் சாந்தி மேரி, கமலா தேவி, ரெனிஷ் பாபு, கனி அம்மாள், ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் நேசக்கரங்கள் முதியோர் இல்லத்திற்கு தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பாக மதிய உணவும் வழங்கப்பட்டது.

  • Share on

அன்று காமராஜர்... இன்று அஜிதா ஆக்னல் - பெருந்தலைவர் பிறந்தநாள் விழாவில் ஹைலைட் கொடுத்த தவெக!

மனைவியுடன் இருந்த தூத்துக்குடி ரவுடி கதையை முடித்த கும்பல்!

  • Share on