• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2)  ஆலோசனை கூட்டம் இன்று ( ஜூலை 8 ) மாலை நடந்தது. 


ஓட்டப்பிடாரம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளரும், எம்எல்ஏவுமான சண்முகையா  தலைமை தாங்கினார். 


இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், 2026 தேர்தலை முன்வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தெருக்களில் நாய்களின் தொல்லைக்கு முடிவு!

தூத்துக்குடியில் இன்று மின்தடை!

  • Share on