தூத்துக்குடியில் அதிமுக மாணவரணி சார்பாக Justice for Ajithkumar கண்டன போஸ்டர் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அஜித் குமார் என்ற இளைஞரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் அந்த இளைஞரை அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. போலீஸ் தாக்குதலில் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இவ்விவகாரத்தில் இதுவரை ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அஜித்குமார் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் அதிமுக மாணவரணி சார்பாக Justice for Ajithkumar கண்டன போஸ்டர் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




