தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பஜாரில் சுற்றிய புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள குளத்தூர், வைப்பார், புளியங்குளம் காட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளனவாம். இந்த நிலையில் நேற்று காலை குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற புள்ளிமானை நாய் விரட்டியதால் குளத்தூர் தெருவீதி, பஜார் வீதிகளில் பயந்து மான் தெறித்து ஓடியது. இதனை அடுத்து அப்பகுதியினர் புள்ளிமானை மடக்கி பிடித்து நாய் கடி காயத்திற்கு முதல் உதவி அளித்து குளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரித்தனர். பின்னர் வந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளிமான மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
குளத்தூர், வைப்பார், புளியங்குளம் வட்டார பகுதியில் வசிக்கும் புள்ளிமான்கள் தண்ணீர் தேவைகளுக்காக சாலையை கடக்க முற்படும் போது வாகன விபத்துகளில் சிக்குகின்றன. எனவே மான்களை பாதுகாக்க வைப்பார், புளியங்குளம், குளத்தூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் மான்கள் சரணாலயம் அமைப்பதுடன், மான்களின் தாகம் தீர்க்க சுற்றியுள்ள நிலங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




