• vilasalnews@gmail.com

எப்போதும் வென்றான் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

எப்போதும் வென்றான் அருகே பாம்பு கடித்து விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அடுத்துள்ள தெற்கு கோடாங்கி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல் ( 60 ). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. இதில் அலறி துடித்த அவரை, அவரது மகன் ஜெயக்குமார் கார் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


விவசாயி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது!

தூத்துக்குடியில் சுற்றிய புள்ளி மான் : வனத்துறையில் ஒப்படைப்பு!

  • Share on