• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் லாரி டிரைவரை மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


நெல்லையைச் சேர்ந்தவர் ராஜேஷ். லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மூன்றாவது மைல் அருகே உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கு பகுதியில் உள்ள இணைப்பு சாலையோரத்தில் லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் ராஜேசை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.


இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மடத்தூர் முருகேசன் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மலையரசன் ( 21 ), பிராங்க்ளின் (20 ), திரு.வி.க நகரச் சேர்ந்த இளஞ்சிறார் ஆகிய மூன்று பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் புதிய வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

எப்போதும் வென்றான் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on