• vilasalnews@gmail.com

மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வினால் தூத்துக்குடி அம்மா உணவகத்தில் ஏற்பட்ட மாற்றம்!

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகம், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று (11ம் தேதி) முதல் மாலை நேரத்திலும் செயல்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரி வித்தார்.


தூத்துக்குடி மாநகர பகுதியில் 10 இடங்க ளில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


அப்போது அவரிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களின் உறவினர்கள், மருத்துவமனை முன்புள்ள இந்த அம்மா உணவகத்தில் காலையிலும், மதியமும் உணவு வழங்குவதுபோல் மாலையிலும் உணவு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டனர்.


இதனை கேட்ட மேயர், உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்தார். அதன்படி இன்று (11ம் தேதி) முதல் அரசு மருத்துவமனை முன்புள்ள அம்மா உணவகத்தில் மட்டும் மாலை நேரத்திலும் உணவு வழங்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது: தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடனிருப்போர் நலனை முன்னிட்டு இன்று முதல் மாலை நேரத்திலும் அம்மா உணவகமானது செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  • Share on

தூத்துக்குடியில் சுற்றிய புள்ளி மான் : வனத்துறையில் ஒப்படைப்பு!

எட்டையபுரத்தில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் : அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் திட்டவட்டம்!

  • Share on